

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுபாட்டு பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவ விமானம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தெஹ் யாக் மாவட்டத்தில் E-11A என்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் தீ பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்தான கூடுதல் தகவல் தெரிந்ததும் தெரியப்படுத்துவோம்” என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ விமானத்தை விழ்த்தியது தலிபான்கள்கள்தான் என்று அந்த அமைப்பின் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.
இந்த நிலையில் இதில் உண்மை இல்லை என்றும் தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மலைகள் அதிகம் கொண்ட காஸ்னி மாகாணத்தில் குளிர் காரணமாக பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக விமனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆப்கன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.