நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

கரோனா வைரஸ் ஆசிய நாடுகளில் பரவலான பாதிப்பு ஏற்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நைஜீரிய அதிகாரிகள் தரப்பில், “நைஜீரியாவில் லசா காய்ச்சலின் தீவிரம் அதிகமாகி உள்ளது. லசா காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 மாகாணங்கள் இக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்” என்றார்.

லசா காய்சல் என்றால் என்ன?

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால் இவ்வைரஸ்கள் அளவுக்கு லசா ஆபத்தானது அல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

லசா காய்சல் காரணமாக கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இக்காய்ச்சல் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in