பிரேசிலில் வெள்ளம்: 57 பேர் பலி

பிரேசிலில் வெள்ளம்: 57 பேர் பலி
Updated on
1 min read

பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 57 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பிரேசில் அதிகாரிகள் தரப்பில், “ பிரேசில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் தென் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இதுவரை 57 பேர் பலியாகி உள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இனாஸ் ஜிராய்ஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.

மேலும் வெள்ளத்திற்கு இதுவரை 18 பேர் மாயமாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

பிரரேசிலில் பெலோ ஹொரிசொன்டேவில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி 171.8 மிமீ மழை பதிவாங்கியது. பிரேசிலின் கடந்த 110 ஆண்டுகால வரலாற்றில் ஒரு நாளில் பெய்த அதிகப்பட்ச மழை அளவு இதுவாகும்.

பிரேசிலின் மழை காரணமாக சுமார் 20,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பிரேசிலில் 99 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in