கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது; நாடு கொடுமையான சூழலை சந்திக்கிறது: சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் : கோப்புப்படம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் : கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் வேகமாக நாடுமுழுவதும் பரவி வருகிறது, கொடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சார்ஸ் வைரஸ் போன்று வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் அந்த நாட்டு மக்களை கொண்டாட்டத்தில் விடாமல் கரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். 1300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அதிபர் தெரிவித்த கருத்தாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா வெளியிட்ட அறிவிப்பில் " புதிய கரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது, நாடு கொடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. கட்சியின் மத்தியக் குழுவின் அனைத்து தலைமையையும் வலிமைப்படுத்திச் செயல்படுத்துவது அவசியமாகும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும், தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும், இந்த போராட்டத்தில் நிச்சயம் வெல்ல முடியும் என அதிபர் ஜின்பிங் தெரிவித்தார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா வைரஸ் சீனாவில் இதுவரை 30 மாநிலங்களில் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 18 நகரங்களுக்கு யாரும் செல்லக்கூடாது, எந்த வாகனங்களும் இயக்கக்கூடாது என்று சீனா போக்குவரத்து தடையைக் கொண்டு வந்துள்ளது. இதனால் 1.10 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சீனாவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா அனைத்தையும் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாவை இயக்கும் ஹோட்டல்கள், விமானடிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in