

மூன்று முஸ்லிம் பயணிகளை விமானத்தை விட்டு வெளியேற்றியதற்காக டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு அமெரிக்கப் போக்குவரத்துத் துறை 50,000 டாலர்கள் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை மீறியதாக டெல்டா ஏர்லைன்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவம் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பாரீஸில் உள்ள சார்லஸ் தி கால் என்ற விமானநிலையத்தில் நடந்தது. டெல்டா விமானத்திலிருந்து முஸ்லிம் தம்பதியர் வெளியேற்றப்பட்டனர்.
முஸ்லிம் உடை அணிந்திருந்ததாகவும், வாட்சில் என்னதையோ அவர் உட்செருகினார் என்றும் சந்தேகமடைந்து டெல்டா அவர்களை வெளியேற்றியது, மேலும் செல்போனில் ‘அல்லா’ என்று பல டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பியதாக விமான ஊழியர் ஒருவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த ஊழியர் பிளைட் கேப்டனிடம் கூற அவர்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்களை திரும்ப விமானத்துக்குள் கேப்டன் அனுமதிக்கவில்லை.
இது ஒரு சம்பவம் என்றால் இன்னொரு சம்பவத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் ஆம்ஸ்டர்டாமில் விமானத்தில் ஏறி அமந்தார். இதுவும் அமெரிக்காவுக்கு வரும் விமானம்தான், இவர்கள் மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் டெல்டா வெளியேற்றியது.
இந்நிலையில் டெல்டா விமான சேவை நிறுவனத்துக்கு அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறை 50,000 டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டது.