

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை தீர்த்து கொள்ள தயாராக இருப்பதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேபாளம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “சில நேரங்களில் சில பிரச்சனைகள் தீர்த்து கொள்ளப்படாமல் இருக்கும். இதனை நாம் மனதில் வைத்து கொண்டே இருக்க கூடாது. எல்லைப் பிரச்சனை உள்ளிட்டவைகளை நாம் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும்.
நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்து வருகிறோம். இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை தீர்க்க நாங்கள் தயராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி இந்தியா - நேபாளம் இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தயாரிப்பில் ஈடுபட்டு வருதாக தெரிவித்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.