

பிரிட்டனில் உள்ள தென் சாண்ட்விச் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் அதிகாரிகள் தரப்பில், “அண்டார்டிக் பிராந்தியத்தில் உள்ள சாண்ட்விச் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பிரிஸ்டல் தீவுக்கு தென்மேற்கே 156 கிலோ மீட்டர் தொலைவில் பதிவாகி உள்ளது. இதன் ஆழம் 35 கிலோ மீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாண்ட்விச் தீவில் மக்கள் யாரும் வசிக்காததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.