கனடா வந்தடைந்தார் இளவரசர் ஹாரி

கனடா வந்தடைந்தார் இளவரசர் ஹாரி
Updated on
1 min read

அரச குடும்பத்திலிருந்து விலகிய இளவரசர் ஹாரி இங்கிலாந்திலிருந்து கனடா வந்தடைந்தார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்தமாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு மார்கல் தனது குழந்தையுடன் சென்றார். இவர்களுடன் இளவரசர் ஹாரி செல்லாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ஜான் போரிசனைச் சந்தித்த இளவரசர் ஹாரி நேற்று கனடா சென்றடைந்தார். ஹாரி, கனடா விமான நிலையம் வந்தடைந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாயின.

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவை எனது மனைவிக்காகவே எடுத்தேன். அரச குடும்பத்திலிருந்து விலகும் இம்முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை என்று இளவரசர் ஹாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in