கொடிய வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மேலும் ஒருவர் பலி

கொடிய வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மேலும் ஒருவர் பலி
Updated on
1 min read

சீனாவின் கொராமா வைரஸ் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் காரணமாக இவ்வைரஸ் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ், கொரானா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரானா வைரஸ் சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்குச் சந்தையிலிருந்து பரவியுள்ளது. முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.

வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய சீன நகரங்களில் பரவும் இந்த கொரானா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது.

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சீனாவில் இவ்வைரஸ் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

மேலும், சீனாவில் 140 பேரிடம் இந்த வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 700க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வைரஸ் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in