Published : 21 Jan 2020 11:03 AM
Last Updated : 21 Jan 2020 11:03 AM

பணக்கார நாடுகள் இயற்கை வளங்களை அதிகம்  சுரண்டுவதோடு, கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது: ஆய்வில் தகவல்

இயற்கை வளங்களை மனிதன் தன் பயன்பாட்டுக்குச் சுரண்டியதன் அளவு ஆண்டொன்றுக்கு இதுவரை இல்லாத அளவு 100 பில்லியன் டன்களைக் கடந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே வேளையில் மூலப்பொருட்களை மறு சுழற்சி செய்வது அளவில் குறைந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மறு சுழற்சி குறைந்தால் அது மேன் மேலும் இயற்கையைச் சுரண்டுவதில்தான் போய் முடியும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

கனிமங்கள், புதைபடிவ எரிபொருட்கள், உலோகங்கள், பயோமாஸ் ஆகியவை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு 9.1%லிருந்து 8.6%க்குக் குறைந்துள்ளதாக சர்குலாரிட்டி கேப் ரிப்போர்ட் 2020 அறிக்கை தெரிவித்துள்ளது.

“எந்த ஒரு நாடும் குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதில்லை, ஆனாலும் பூவுலகின் பவுதிக எல்லைகளுக்குள் செயல்படுகின்றன” என்று இந்த அறிக்கையின் ஆசிரியர் மார்க் டி விட் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தின் உந்து விசையான இயற்கை வளங்கள் பயன்பாடு 2 ஆண்டுகளில் 93 பில்லியன் டன்களிலிருந்து 100.6 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

1970லிருந்து மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. உலகப் பொருளாதாரம் 4 மடங்கு வளர்ந்துள்ளது, வர்த்தகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. பரவலான மறுசுழற்சி இல்லாததால் ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களுக்கான தேவை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உந்தித் தள்ளப்படுகிறது.

பொருட்களின் உலகளாவிய பயன்பாடு 2050-ம் ஆண்டு வாக்கில் 170-184 பில்லியன் டன்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று இந்த அறிக்கை கூறுகிறது.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், குறிப்பாக குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அதே வேளையில் சுற்றுச்சூழல், பல்லுயிரித்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கவும், சுத்தமான குடிநீர், சுத்தமான காற்று, மண் ஆகியவற்றுக்காக உலக நாடுகள் இயற்கை வளங்களை மறுசுழற்சி செய்ய வேண்டியுள்ளது என்கிறது இந்த அறிக்கை, ஆனால் மறு சுழற்சி குறைந்து கொண்டே வருகிறது.

பணக்கார நாடுகள் வளரும் நாடுகளை ஒப்பிடும் போது நபர் ஒருவருக்கு 10 மடங்கு அதிகம் இயற்கை வளங்களைச் சுரண்டுகிறது. அதிக குப்பைகளையும் கழிவுகளயும் உற்பத்தி செய்கிறது என்கிறது இந்த அறிக்கை.

எனவே, பணக்கார நாடுகள், ‘தங்களது ஏற்றுமதி, இறக்குமதிகளின் தாக்கங்கள் குறித்து பொறுப்பேற்க வேண்டியுள்ளது’, பணக்கார நாடுகள் நுகர்வதில் பெரும்பகுதி வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து வருவது என்பதோடு அந்த நாடுகளுக்கு பணக்கார நாடுகளின் கழிவுகள், குப்பைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது

இதே அறிக்கையில் மறு சுழற்சி ஏழைநாடுகளில் அதிகம் உள்ளது. ஏனெனில் கழிவுகள் முறைசாரா ஊழியர்களுக்கு மதிப்பு மிக்க வருவாய் ஆதாரமாக உள்ளது., இதற்கு சீனாவை உதாரணம் காட்டிய இந்த அறிக்கை, சுற்றுச்சூழல் பூங்காக்களில் முதலிடம் வகிக்கிறது, ஒரு வர்த்தகத்தின், உற்பத்தித் துறையில் உருவாகும் கழிவுகள் மற்றொன்றுக்கு மூலப்பொருள் ஆகிறது” என்கிறது இந்த அறிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x