Published : 21 Jan 2020 09:05 AM
Last Updated : 21 Jan 2020 09:05 AM

பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் வீச்சுத் தாக்குதல் - ஈரான் கைவரிசையா?

இராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் ஏ.எப்.பி. செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் வீச்சுத் தாக்குதலின் தாக்கத்திற்குப் பிறகு சைரன்கள் அலறின.

ஈரான் ஆதரவு துணை ராணுவப்படைகள் மீது அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்காக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதே போன்ற தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் ஆதரவு ராணுவப் படைகள் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சுலைமானி கொலைக்குப் பிறகே இராக்கில் உள்ள அமெரிக்க முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது, இந்நிலையில் இந்தத் தாக்குதலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தத் தக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அரசுக் கட்டிடங்கள், அயல்நாட்டு மிஷன்கள், ஆகியவை உள்ளன.

இராக்கி போலிசார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது 3 கத்யூஷா ராக்கெட்டுகள் உயர் பாதுகாப்பு கிரீன் மண்டலம் அருகே விழுந்ததாகத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x