Published : 19 Jan 2020 07:12 PM
Last Updated : 19 Jan 2020 07:12 PM

சீனாவில் கொடிய வைரஸ் தாக்குதலில் சிக்கிய இந்தியர்: உதவி கோரும் உறவினர்கள் 

சீனாவில் கொடிய வைரஸ் தாக்குலில் தீவிர சிகிச்சைப் பெறும் முதல் வெளிநாட்டரான ப்ரீதி மகேஸ்வரி நலம்பெற அவரது சகோதரர் மைக்ரோப்ளாக் தளங்களின் வாயிலாக நிதி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரீதி மகேஸ்வரி (45) ஷென்செனில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் ஆசிரியரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சார்ஸ் வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு ஆளான பிரீதி மகேஸ்வரியின் கணவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவால்.

உலகையே அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ் கொரானா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரானா வைரஸ் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறியை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 650 பேர் பலியாகினர். இதனால் தற்போது சார்ஸ் வைரஸ் தாக்குதல் காரணமாக தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது.

வுஹான் எனப்படும் சீன நகரத்திலிருந்து பரவிய புதிய சார்ஸ் வைரஸ் தாக்குதலில் இந்நோய் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது முதலில் நிமோனியா காய்ச்சலாக ஆரம்பித்து பின்னர் சுவாசத்தை பாதிக்கும். தற்போது இதே தன்மையில் இந்தியர் ஒருவரை இந்த நோய் தாக்கியுள்ள நிலையில் இந்நோய்க்கு தீவிர சிகிச்சை பெறும் முதல் வெளிநாடடவராக இந்தியரான ப்ரீதி மகேஸ்வரி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகேஸ்வரி பணியாற்றிவந்த ஷென்சென் நகரிலேயே உள்ள உள்ளூர் மருத்துவமடினயில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மற்றும் பிற துணை உபகரணங்களின் உதவியோடு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஷென்செனில் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த 'மூன்றாம் மக்கள் மருத்துவமனை'யில் தற்போது இரண்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக என்று ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மகேஸ்வரியின் கணவர் கோவால், ஷென்சென் நகரிலிருந்து பிடிஐயிடம் கூறுகையில், என் மனைவிக்கு கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் திங்களன்று உறுதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஷென்செனில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அவர் உரிய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நினைவற்று இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அவர் குணமடைய நீண்ட நேரம் ஆகலாம் என்றும் கூறியுள்ளனர்.'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மகேஸ்வரியின் சகோதரர் மணீஷ் தாபா என்பவர் தனது சகோதரியின் உயிரைக் காப்பாற்ற நிதி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''எனது பெயர் மணீஷ் தாபா எனது சகோதரி கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சார்ஸ் வைரஸின் கடும் தாக்குதலால் டைப் 1 சுவாசம் செயலிழந்துள்ள நிலையில், மல்டிபிள் ஆர்கன் டிஸ்ஃபங்க்ஷன் சிண்ட்ரோம் (மோட்ஸ்) செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு நினைவின்றி இருக்கிறார்.

ஜனவரி 11 ஆம் தேதி முதல் அவர் ஷெகோ மருத்துவமனையின் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷென்சென் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஆரம்ப பள்ளி கலை ஆசிரியராக உள்ள இவருக்கு இரண்டு பள்ளி செல்லும் மகள்களும் உள்ளனர்.

மகேஸ்வரிக்கு, வெளிப்புற சுவாசத்திற்காக வென்டிலேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர டயாலிசிஸ் மற்றும் இரத்த சுத்திகரிப்பு செயல்முறை ஆகிய மருத்துவ சிகிச்சைகளும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிகிச்சையின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தற்போது சிகிச்சைக்கு எங்களுக்கு 10 லட்சம் சீன யுவான் செலவாகிறது, இது ரூ. இந்திய நாணயத்தில் 1 கோடி ரூபாய் ஆகும். இந்த சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்படடு அவரது உயிர் காப்பாற்றப்பட எங்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.

எங்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் சிகிச்சையில் உதவவும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியம்! இந்த நிதி திரட்டலை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் நன்கொடை பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் தேவையான தொகையை திரட்ட எங்களுக்கு உதவுங்கள். உங்கள் உதவி மற்றும் வாழ்த்துக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.''

இவ்வாறு ப்ரீதி மகேஸ்வரியின் சகோதரர் வேண்டுகோள் சமூக வலைதளத்தில் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x