அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: லெபனானில் 400 பேரை செஞ்சிலுவை சங்கம் மீட்டது

லெபனானில் அரசை எதிர்த்து நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி.
லெபனானில் அரசை எதிர்த்து நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி.
Updated on
2 min read

பெய்ரூட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் வன்முறையாக மாறியதில் கிட்டத்தட்ட பாதுகாப்புப் படையினர் உட்பட 400 பேர் காயமடைந்துள்ளதாக என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

லெபனானில் சில ஆண்டுகளாகவே கடும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் மக்கள் 13 போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக லெபனான் பிரதமர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் புதிய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடக்காமல் முடங்கிய நிலையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வாரம் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

''லெபனானின் ஊழல் மிக்க அரசியல் வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும்'' என்று ஆர்வலர்கள் நடத்திய இன்றைய போராட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைவிட இது மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆர்வலர்கள் திரண்டு போராட்டம் வெடித்ததாக கூறப்படுகிறது.

மக்கள் எதிர்ப்பு அலைகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மேலும் பிரமாண்ட பேரணிகள் திரளும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 377 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமையன்று மிகவும் சாதாரண அளவில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொண்டுதான் போராட்டம் தொடங்கியது, பிறகு இதில் நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்தனர்.

சிலர் தங்கள் முகங்களை துணியால் மறைத்துக்கொண்டு பெரிய கற்கள், பூந்தொட்டிகளை மற்றும் பிற பொருட்களை காவல்துறையினர் மீது வீசினர்.

சிலர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய அதன் முள்வேலி தடுப்புகளை மீற முயன்றபோது அவர்களை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.

மேலும் கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர்,கண்ணீர்ப்புகை வீச்சை பயன்படுத்தினர்.

மத்திய பெய்ரூட்டில் கண்ணீர் வாயு அடர்த்தியான புகைமூட்டத்தை உருவாக்கியதால், கல் வீசும் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் ரப்பர் தோட்டாக்களால் சுட்டதாக ஏ.எஃப்.பி புகைப்படக் கலைஞர் ஒருவர் தெரிவித்தார்.

''பெரும்பாலும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக லெபனானின் கலகப் பிரிவு போலீசாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட சக்தியை மிருகத்தனமாகப் பயன்படுத்தியுள்ளதாக'' மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் செய்தது.

''கலகப் பிரிவு பாதுகாப்புப் படையினர் தங்கள் மனித உரிமைக் கடமைகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர், எதிர்ப்பாளர்களின் தலையில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பாய்ச்சுவதற்கு பதிலாக, கலகப்பிரிவு காவல்துறையினர், அவர்களின் கண்களில் ரப்பர் தோட்டாக்களை வீசுவது மற்றும் மருத்துவமனைகள் மற்றும் ஒரு மசூதிகளில் மக்களைத் தாக்கியுள்ளனர். பாதுகாப்புப் படையினரின் துஷ்பிரயோகத்திற்காக அவர்களுக்கு எந்த தண்டனையுமில்லை. துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினருக்கு எந்தவித தண்டனையுமற்ற இந்த கலாச்சாரத்தை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

என்று மனித உரிமைகள் குழுவின் துணை மத்திய கிழக்கு இயக்குனர் மைக்கேல் பேஜ் கூறினார்.

போராட்டக்காரர்களின் அழுத்தத்தினால் அக்டோபர் 29 அன்று பதவி விலகிய வெளியேறிய பிரதமர் சாத் ஹரிரி, நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அவர் குற்றம்சாட்டினார். அவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று குற்றம் சாட்டிய சாத் ஹரிரி, "சந்தேகத்திற்கிடமான மற்றும் பைத்தியம் நிறைந்த காட்சி" என்றும் அவர் கண்டித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in