சுலைமானைக் கொன்றது அமெரிக்காவுக்கான அவமானம்: அயத்துல்லா அலி காமெனி

சுலைமானைக் கொன்றது அமெரிக்காவுக்கான அவமானம்: அயத்துல்லா அலி காமெனி
Updated on
1 min read

தளபதி சுலைமானைக் கொன்றது அமெரிக்காவுக்கான அவமானம் என்று ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “அமெரிக்கா கோழைத்தனமாக தளபதி சுலைமானைக் கொன்றுள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டது அந்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட அடி என்றும் அயத்துல்லா காமெனி தெரிவித்துள்ளார்.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in