Published : 17 Jan 2020 09:34 AM
Last Updated : 17 Jan 2020 09:34 AM

நினைத்ததை விட பூமிக்கு வெகு அருகில் தீவிர சூரியப் புயல்கள்  : புதிய ஆய்வில் தகவல்

துருவ வானத்தை பச்சை மற்றும் ஊதா நிறங்களினால் வண்ணமயமாக்கும் சூரியப் புயல்களின் பின்னணியில் அதன் இருண்ட பக்கம் உள்ளது. இது நம் மின்சார அமைப்புகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள், சாட்டிலைட்களை அழிக்கும் சக்தி படைத்தது. இந்நிலையில் சூரியப் புயல்கள் குறித்த ஒரு புதிய ஆய்வு கூறுவது என்னவெனில் நாம் பூமிக்கு எவ்வளவு அருகில் இது ஏற்படும் என்று கணித்து வைத்திருந்தோமோ அதைவிடவும் வெகு அருகில் இந்த சூரியப்புயல்களின் மூலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நாம் வாழும் பூமியை மேக்னட்டோஸ்பியர் என்ற காந்தப்புலம் சூரிய ஒளியின் தீங்கான கதிர் வீச்சிலிருந்து நம்மைக் குமிழி போல் இருந்து காக்கிறது. ஆனால் சூரியன் எப்போதாவது அதிவேக கதிர்வீச்சுக் கற்றைகளை வெளியிடும் போதும் அதனுடன் தீவிர காந்தப்புலன் அலைகளையும் ஏற்படுத்தும் போது இவை நம் பூமியின் காந்தப்புலத்துடன் வலுவான முறையில் தொடர்பு கொள்கிறது.

சூரியப்புயல் பூமியின் மேக்னட்டோஸ்பியரைத் தாக்கும் போது இருவிதமான காந்தப்புயல் அலைக்கோடுகள் ஒன்றுடன் ஒன்று பிணைகின்றன. இந்தப் பிணைப்பு உஷ்ணத்தை உருவாக்கி மின் ஏற்றம் பெற்ற அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்களை முடுக்கி விடுகிறது. இதனையடுத்து பூமியின் காந்தப்புலம் தற்காலிகமாக பலவீனமடைகிறது. இதனால் சக்தி வாய்ந்த காந்தப் புயல் உருவாவதால் நமக்கு வண்ணச் சுடரொளி போல் தெரிகிறது.

இத்தகைய சூரியப் புயல்கள் அரிது என்பதலும் போதிய செயற்கைக் கோள்கள் இவற்றைத் தடம் காண முடியாது என்பதாலும் எங்கிருந்து இந்த காந்தப்புலக் கோடுகள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு பிணைகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்கிறது இந்த ஆய்வு.

இதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் நாஸாவின் நிகழ்வுகளின் காலவரலாறையும் பெரிய அளவில் துணைப்புயல்கள் காலத்தில் சாட்டிலைட்களையும் ஆராய்கின்றனர். சூரியப்புயல்கள் ஏற்படும் கட்டத்தில் இந்த சாட்டிலைட்கள், சூரியனை நேரடியாக எதிர்கொள்ளாத பூமியின் மேக்னட்டோஸ்பியரின் காந்த வால்பகுதியில் இருக்கின்றன. மேக்னடோடெய்ல் என்று அழைக்கப்படும் இது சூரியப்புயலின் போது நீளமடைகிறது. இதனைக் கண்டுபிடித்த பிறகுதான் விஞ்ஞானிகளுக்கு தெரியவந்தது சூரியப்புயல்கள் நாம் நினைப்பதை விட பூமிக்கு வெகு அருகில் நிகழ்கின்றன என்பது.

எனவே காந்தப்புயல் அலைக்கோடுகள் பின்னிப்பிணையும் நிகழ்வினால் முடுக்கிவிடப்படும் அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்கள் அதிக ஆற்றல்கள் கொண்டதாகிறது. பூமியை நோக்கி மிதந்து வரும் எலெக்ட்ரான்கள் காந்தப்புலக் கோடுகளுடன் ஆற்றலையும் சுமந்து வருவதால்தான் நமக்கு பச்சை, ஊதா போன்ற உருவெளித் தோற்ற சுடரொளி தெரிகிறது.

இது நூற்றுக்கணக்கான சாட்டிலைட்களுக்கும் மனித டி.என்.ஏ.வுக்கும் தீங்கு விளைவிப்பது. மேலும் பூமியில் வசிப்பவர்களுக்கும் சூரியப்புயல் குறிப்பிடத்தகுந்த தீங்கை ஏற்படுத்துகிறது என்கிறது இந்தப் புதிய ஆய்வு. 1921ம் ஆண்டு உதாரணமாக இத்தகைய சூரியகாந்தப் புயல் தந்தி வழித்தொடர்புகளை கடுமையாகச் சேதம் செய்ததோடு மின்சார இணைப்புகளில் கோளாறுகளை உருவாக்கி நியூயார்க் நகரில் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று எரிந்து போனதற்கும் காரணமானது.

சூரியகாந்தப்புயல் குறித்த இந்த ஆய்வு ஜனவரி 13ம் தேதியன்று நேச்சர் பிசிக்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

ஆதாரம்: லைவ்சயன்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x