

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் காடுகள் அடர்ந்த 10 மில்லியன் ஹெக்டேர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் இறந்துள்ளனர். அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் இறந்துள்ளன. 3 மாதங்களுக்கு மேல் காட்டுத்தீ எரியும் இடங்களில் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், தீ ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து போராடி வரும் தீயணைப்பு வீரர்களுக்கு இந்த பலத்த மழையால் சற்று நிவாரணம் கிடைத்தாலும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரம் காட்டுத் தீயை முழுமையாக அணைக்க இந்த மழை போதாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.