Published : 14 Jan 2020 05:11 PM
Last Updated : 14 Jan 2020 05:11 PM

சவுதி அரேபியாவில் 2019-ம் ஆண்டில் 3 சிறுவர்கள் உட்பட 184 பேருக்கு மரண தண்டனை: மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் 184 பேருக்கு மரன தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரிப்ரீவ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ரிப் ரீவ் தெரிவித்துள்ளது.

இதில் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் ரிப்ரீவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிமைகள் அமைப்பின் தலைவர் மயா ஃபோவா கூறும்போது, “முகமது பின் சல்மானின் இருண்ட ராஜ்ஜியத்தின் இன்னொரு மைல்கல் இது. இருக்க இருக்க மரண தண்டனை அதிகரித்தே வருகிறது 2020-ல் ஏற்கெனவெ 4 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.

இப்படி மரண தண்டனை அளித்துக் கொண்டே சர்வதேச சட்டவிதிகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சவுதி அரேபியா ஜி20 மாநாட்டை நடத்த லாயக்கற்றது என்று ரிப்ரீவ் அமைப்பு கண்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x