Published : 14 Jan 2020 11:10 AM
Last Updated : 14 Jan 2020 11:10 AM

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெக்கல் தம்பதியின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

இங்கிலாந்து மற்றும் கனடாவில் இனி வரும் காலங்களில் நேரத்தை செலவிட இருப்பதாக இளவரசர் ஹாரி மற்றும் மெக்கல் தம்பதி எடுத்த முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இளவரசர் ஹாரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரச குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனர் என்றும் இனி வரும் காலங்களில் பிரிட்டன் மற்றும் கனடாவில் தங்களது நேரத்தை செலவிட இருப்பதாக புதன்கிழமையன்று ஹாரி அறிவித்தார். இளவரசர் ஹாரியின் இந்த முடிவை இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரி - மெக்கலின் முடிவு குறித்து திங்கட்கிழமையன்று இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தினார்.

இதன் முடிவில் ஹாரி மற்றும் மெக்கலின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அரச குடும்பம் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x