ஆப்கானிஸ்தானில் மழை, பனிக்கு 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மழை, பனிக்கு 19 பேர் பலி
Updated on
1 min read

கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கானிஸ்தானில் பலத்த மழை மற்றும் பனியின் காரணமாக 19 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் திங்கட்கிழமை கூறும்போது, “ஆப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் கடுமையான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சரிந்துள்ளன. மேலும் பல இடங்களில் கடுமையான பனி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து கனமழை பொழியும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

எச்சரிக்கையைத் தொடர்ந்து, உள்ளூர் அரசு வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்க உடனடிக் கூட்டத்திற்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடுமையான பனி பொழிவதால் நாட்டின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in