

ஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு தாய்லாந்து முகாமில் உள்ள யானைகள் வருத்தம் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கங்காரு தீவு போன்ற பகுதிகள் முற்றிலுமாக தீக்கு இரையாகின.
காட்டுத் தீ காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 24 பேர் பலியாயினர். கோலா கரடிகள், கங்காரு என லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விலங்கினங்கள் பலியாகின.
காட்டுத் தீ பாதிப்பிலிருந்து ஆஸ்திரேலியா மீண்டு வர உலகின் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு வருத்தம் தெரிவித்து தாய்லாந்து முகாம்களில் உள்ள யானைகள் அணிவகுத்து நின்றன.
கங்காரு மற்றும் கோலா கரடிகள் உள்ள பதாகைகளை யானைகள் கட்டி அணைத்தபடி நின்றன. இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்ளும் கலந்து கொண்டனர்.