

கனடா நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பெரிய அணு மின் நிலையத்தில் அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை அலாரத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
"பிழையாக" அனுப்பப்பட்ட இந்த எச்சரிக்கை மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியதால் டொராண்டோ மேயர் உள்ளிட்ட பலரும் விசாரணை நடத்தக் கோரியுள்ளனர்.
கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ளது பிக்கரிங் அணுமின் நிலையம்.
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றான, பிக்கரிங் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொராண்டோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இதில் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு நேற்று மதியம் 12.30க்கு (அங்கு காலை 7:30 மணிக்கு) திடீரென எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அபாய எச்சரிக்கை பிக்கரிங் அணு உற்பத்தி நிலையத்தின் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்டாரியோ மாகாண வாசிகளுக்கும் சென்றது.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அணுசக்தி ஆலையை நிர்வகிக்கும் ஒன்டாரியோ மின் உற்பத்தி நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது, ''அபாய எச்சரிக்கை தவறுதலாக வழங்கப்பட்டுவிட்டது. பிக்கரிங் அணுசக்தி உற்பத்தி நிலையத்தில் செயலில் சரியாக உள்ள அணுசக்தி நிலையத்தில் பிரச்சினை எதுவும் எதுவும் இல்லை. முந்தைய எச்சரிக்கை பிழையாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கோ சூழலுக்கோ எந்த ஆபத்தும் இல்லை'' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
பிக்கரிங் மேயர் டேவ் ரியான் உட்பட பல உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை கோரியுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிக்கரிங் மேயர் ரியான் கூறுகையில், "உங்களில் பலரைப் போலவே, இன்று காலை அந்த அவசர எச்சரிக்கையைக் கேட்டு நான் மிகவும் பதற்றமடைந்தேன். உண்மையான அவசரநிலை இல்லை என்று நான் நிம்மதியாக இருக்கும்போது, இது போன்ற பிழை ஏற்பட்டது குறித்து நான் வருத்தப்படுகிறேன். நான் மாகாணத்துடன் பேசியுள்ளேன், முழு விசாரணை நடைபெற வேண்டும் என்று கோருகிறேன், ”என்றார்.
டொராண்டோ மேயர் ஜான் டோரியும் விசாரணைக்கு அழைப்பு விடுத்தார், பகுதிவாசிகள் "இந்த நிகழ்வால் மக்கள் தேவையில்லாமல் பதட்டத்திற்குள்ளாகிவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.