

மறைந்த ஓமன் மன்னர் காபூஸுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்ததாக இன்று ( சனிக்கிழமை) ஓமன் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் ஓமன் மன்னர் கப்பூஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மை பாம்பியோ கூறும்போது, “ ஓமன் மன்னர் காபூஸ் இறந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறேன். அவர் ஒமன் மக்களையும், ஓமன் - அமெரிக்க நட்புறவையும் விரும்பினார்” என்றார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக ஓமனை ஆட்சி செய்த மன்னர் காபூஸ்ஸுக்கு வாரிசு யாரும் இல்லாததால் கலாச்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த ஹைதம் பின் தாரிக் ஓமனின் புதிய மன்னராக சனிக்கிழமை பதவியேற்றார்.