Published : 11 Jan 2020 12:48 PM
Last Updated : 11 Jan 2020 12:48 PM

ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் உடல்நலக் குறைவால் மரணம்

ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் உடல்நலக் குறைவால காலமானார். அவருக்கு வயது 76.

இதுகுறித்து ஓமன் ஊடகங்கள், “ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம்தான் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மறைந்த ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் கடந்த 1970 ஆம் ஆண்டு தனது தந்தையை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அரியணையில் ஏறியவர்.இவரது ஆட்சிக் காலத்தில் ஓமனில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

மோடி இரங்கல்

ஓமன் மன்னர் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''மன்னர் கபூஸ் மரணத்தைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்திருக்கிறேன். ஓமன் மன்னர் தொலைநோக்குத் தலைவராகவும் இருந்தார், அவர் ஓமனை நவீன மற்றும் வளமான தேசமாக மாற்றினார். மறைந்த காபூஸ் இந்தியாவின் உண்மையான நண்பராக இருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x