அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹாரி அறிவிப்பு

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹாரி அறிவிப்பு
Updated on
1 min read

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையின தந்தை, கருப்பின தாய்க்கு பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாக பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த பின்னணியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும் மேகன் மெர்கலும் அண்மையில் அறிவித்தனர். அரச பரம்பரை சொத்து வேண்டாம் என்றும் சொந்தமாக உழைத்து முன்னேறுவோம் என்றும் இருவரும் உறுதிபட கூறியுள்ளனர்.

அரச குடும்பத்தை விட்டு விலகி வடஅமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும் ராணி, காமன்வெல்த் மற்றும் ஆதரவாளர்களுக்கு மதிப்பளிக்கும் கடமையை தொடருவோம் என்றும் சமூகவலைதளத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in