ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத் தீ எச்சரிக்கை: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத் தீ எச்சரிக்கை: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்
Updated on
1 min read

காட்டுத் தீயின் தீவிரம் அதிமாகும் என்பதால் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு உயரதிகாரி மார்க் கூறும்போது, “நான் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைக் கவனமாகக் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்புதான் தற்போது அவசியம். மீட்புப் பணி வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

மேலும். தென்கிழக்குப் பகுதியில் கடற்கரை சுற்றுலாத் தளங்களில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த செடம்பர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கங்காரு தீவு போன்ற பகுதிகள் முற்றிலுமாக தீக்கு இரையாகி உள்ளன. காட்டுத் தீ காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 24 பேர் பலியாயினர். கோலா கரடிகள், கங்காரு என லட்சகணக்கான எண்ணிக்கையில் விலங்கினங்கள் பலியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in