

உலக அமைதியை கருத்தில் கொண்டு ஈரான் மீது எந்தவித ராணுவத் தாக்குதலையும் நடத்த விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் நடத்திய ஏவு கணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் அவர் கூறினார்.
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டது. இதையடுத்து, அமெரிக்கா - ஈரான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தி யாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப் பட்ட ஏவுகணை தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடு களின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி ஈடுபட்டார். இதன் காரணமாகவே, அவரை அமெரிக்கா அழித்தது. மற்றபடி, ஈரான் மீதோ அல்லது அந்நாட்டு மக்கள் மீதோ எந்த கோபமும் அமெரிக்காவுக்கு இல்லை.
உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா. அதனைக் கருத்தில்கொண்டு, ஈரான் மீது எந்த தாக்குதலையும் நடத்த விரும்பவில்லை. ஆனால், அந்நாடு செய்த செயலுக்கான பலனை அவர்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.
எனவே, ஈரான் மீது தற்போது இருக்கும் பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறோம். இது தொடர் பான அறிவிப்பு பிறகு வரும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஈரான் தூண்டி வருகிறது. ஈரான் என்ற ஒரே ஒரு நாடால் அந்த பிராந்தியத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல், அனுமதி இல்லாமல் அணு ஆயுதங்களையும் ஈரான் தயாரித்து வருகிறது. அந்நாட்டின் இந்த அரா ஜகப் போக்கை அமெரிக்கா இனியும் வேடிக்கை பார்க்காது. அமெரிக்க அதிபராக நான் இருக்கும் வரை, அணு ஆயுதம் வைத்திருக்க ஈரானுக்கு அனுமதி கிடைக்காது என்றார்.