

இராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் கடும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் பாரம்பரிய பரம வைரி ஆகும் ஈரான். பிரதமர் நெதன்யாஹு கூறும்போது, ஈரான் எங்கள் மீது கையை வைத்தால் நிச்சயம் பெரிய அடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளார்.
ஜெர்சலேமில் அவர் கூறும்போது, “எங்கள் மீது தாக்குதல் நடத்த யார் முயற்சித்தாலும் பெரிய அளவில் பதிலடி கிடைக்கும். ஈரானிஅய் புரட்சிப்படை தளபதி காசிம் சுலைமானி ஒரு தலைமைப் பயங்கரவாதி” என்றார்.
ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதையடுத்து இருநாடுகளிடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது, இதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவம் மற்றும் அதிபர் ட்ரம்ப்பை பயங்கரவாதி என்று அறிவித்த ஈரான், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் பலி என்று ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது, அமெரிக்கத் தரப்பில் ட்ரம்ப், “ஆல் இஸ் வெல்” என்று அதனை மறுத்துள்ளார்.