

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு லட்சக்கணக்கான விலங்குகள் பலியாகி உள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் தரப்பில், ” கடந்த வாரம் அதிதீவிரமாக ஏற்பட்ட காட்டுத் தீயால் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் வெப்ப நிலை உயரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 24 பேர் பலியானதாகவும், கோலா கரடிகள் , காங்காருக்கள் என லட்சகணக்கான எண்ணிக்கையில் விலங்கினங்கள் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 480 மில்லியன் விலங்குகள் ஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு பலியானதாக பலியானதாக தனியார் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் தவறிவிட்டார் என சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.