எங்கள் மண்னை பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

எங்கள் மண்னை பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்
Updated on
1 min read

அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் பாகிஸ்தான் தனது மண்ணை பிறநாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்காது என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

வளைகுடா பகுதிகளில் பதற்றத்தை தணிக்கவும், அமைதியை ஏற்படுத்தும் முயற்சியிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி ஈரான் , ஐக்கிய அமீரகம், சவுதி, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவத் துறை அமைசர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில், “ மத்திய கிழக்குப் பகுதிகளில் மோதலை தவிர்ப்பதை பாகிஸ்தான் அடிகோடிட்டு காட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் தனது மண்ணை பிறநாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்காது என்றும் பிராந்திய மோதல்களிலும் பங்கேற்காது என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்

பின்னணி:

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.

அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in