

இந்தோனேசியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் புத்தாண்டு மாலை முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மின்சாரம் பல மாவட்டங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசிய வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்துத் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தோனேசியா மோசமான வெள்ளத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வெள்ளம் காரணமாக காலாரா, டைபாய்ட் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.