Published : 02 Jan 2020 12:16 PM
Last Updated : 02 Jan 2020 12:16 PM

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மூத்த ராணுவ அதிகாரி மாயம்

மாயமான தைவான் மூத்த ராணுவ அதிகாரி

தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாயினர்.

இதுகுறித்து தைவான் ராணுவ அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, “தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் UH-60 விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தடுமாறிய நிலையில் தைவானின் மலைப் பகுதியில் தரையிறங்கியது. இதில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 பேரை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.

மாயமானவர்களில் தைவானின் மூத்த ராணுவ அதிகாரியான ஷின் யீ மிங்கும் ஒருவர். இதனை தைவான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் யிலன் நகரில் காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x