Published : 01 Jan 2020 02:06 PM
Last Updated : 01 Jan 2020 02:06 PM

பாக்தாத்தில் தூதரகம் தாக்குதல்: 'அமெரிக்கா தனது மக்களைப் பாதுகாக்கும்'- மைக் பாம்பியோ

பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகக் கட்டிடம் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா அதன் மக்களைப் பாதுகாக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கருத்து தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது . இதில் பலர் பலியாயினர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தை ஈரான் ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கினர்.

இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஏதேனும் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டாலும் அதற்கான பெரிய விலையை ஈரான் கொடுக்க நேரிடும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகக் கட்டிடம் தாக்கப்பட்டது குறித்து மைக் பாம்பியோ கூறுகையில், ''அமெரிக்கா அதன் மக்களைப் பாதுகாக்கும். இது தொடர்பாக இரான் அதிபர் பர்ஹம் சாலிஹ் தொலைபேசி வாயிலாக உரையாடினார்'' என்றார்.

இதுகுறித்து மைக் பாம்பியோவின் செயலாளர் கூறும்போது, “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரருடனான இராக் தலைவர்கள் உரையாடலில் அங்குள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கச் சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்” என்றார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x