Published : 30 Dec 2019 03:38 PM
Last Updated : 30 Dec 2019 03:38 PM

ஐஎஸ்ஸுடன் தொடர்பு? - துருக்கியில் இராக், சிரியாவை சேர்ந்த 100 பேர் கைது

துருக்கியில் ஆறு மாகாணங்களில் ஐஎஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து துருக்கி அரசு தரப்பில், “ துருக்கியின் அங்காரா, புர்சா, பட்மன், அனடோலு உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் இராக்கை சேர்ந்தவர்கள், 20 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சிரியாவில் நடக்கும் மோதல் காரணமாக வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் மிக எளிதாக துருக்கியில் நுழைந்து விடுவதாக துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கைது நடவடிக்கைகளில் துருக்கி அரசு இறங்கி உள்ளது.

மேலும் சிரியாவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலால் துருக்கியின் சுற்றுலா துறை கடுமையான பாதிப்பை சந்தித்தது.

2017 ஆம் ஆண்டு புத்தாண்டின்போது, துருக்கியின் இஸ்தான்புல்லில் இரவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட ஐஎஸ் தாக்குதலில் 39 மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x