

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவர் ஒருவர் தனது பள்ளி அறிவியல் கண்காட்சிக்காக குறைந்த விலையிலான செயற்கை கை ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கலிபோர்னியாவில் வசித்து வருபவர் நிலே மேத்தா. அங்கு இர்வின் பப்ளிக் பள்ளியில் அவர் படித்து வருகிறார். தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்காக அவர் குறைந்த விலையிலான செயற்கைக் கை ஒன்றை உருவாக்கி உள்ளார்.
அவரது படைப்புக்காக அமெரிக்கப் பள்ளிகளில் கல்வி யில் சிறந்து விளங்கும் மாணவர் களுக்கு வழங்கப்படும் நீல ரிப்பன் விருது நிலே மேத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவரது படைப்பு ஆரஞ்ச் மாவட்டஅறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிக்கும் தேர்வாகி நான்கு முதல் நிலை பரிசுகளை வென்றுள்ளது.
இதுகுறித்து நிலே மேத்தா கூறும்போது, "மனிதக் கை போலவே செயல்படும் இந்த செயற்கை கையை உருவாக்கு வதற்கு எனக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. முதலில், இந்தக் கண்காட்சிக்காக என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குறைந்த விலையில் செயற்கை யான உடல் உறுப்புகள் எதையே னும் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் செயற்கை கையை உருவாக்கினேன்" என்றார்.
இன்று சந்தையில் இருக்கும் செயற்கைக் கைகளின் விலை சுமார் ரூ.21 லட்சம். ஆனால் நிலே மேத்தா தயாரித்துள்ள கையின் விலை சுமார் ரூ.15 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.