

ஈரானில் உள்ள புஷேர் அணு உலை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புஷேர் அணு உலைக்கு 53 கிமீ கிழக்கே இந்த நிலநடுக்க மையம் இருந்தது. வெள்ளிக்கிழமை காலை 5.23 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 38 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் கொஞ்சம் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் அரசு ஊடகம் இந்த நிலநடுக்கம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால் புஷேர் அணு உலை இதைவிடவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திலும் ஒன்றும் ஆகாத விதமாக பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் முக்கியமான ஃபால்ட்லைனின் மேல் உள்ளதால் நிலநடுக்கங்கள் இங்கு ஏறக்குறைய தினசரி செய்திதான். 2003ம் ஆண்டு 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் பாம் என்ற நகரம் தரைமட்டமானது. சுமார் 26,000 பேர் இதில் பலியாகினர்.
பாம் நகரம் புஷேர் அணு உலைக்கு அருகில்தான் உள்ளது, ஆனால் 2003 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.