Last Updated : 29 Aug, 2015 03:33 PM

 

Published : 29 Aug 2015 03:33 PM
Last Updated : 29 Aug 2015 03:33 PM

ஐ.எஸ். இயக்கத்தை தடை செய்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு

சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். இயக்கத்தை தங்கள் நாட்டில் தடை செய்திருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை ஐ.நா. சபை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த நடவடிக்கையை தொடர்ந்து இது குறித்த முடிவை எடுத்ததாக உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஐ.எஸ். கொடிகள் மற்றும் ஆதரவான வாசகங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெறுகின்றன. ஆனால் தங்களது நாட்டில் ஐ.எஸ். நடமாட்டம் இல்லை என்று அந்நாடு திட்டவட்டமாக தெரிவித்து வந்தது.

ஆனால் ஆப்கான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் செயல்படும் தாலிபான் மற்றும் அல்காய்தா இயக்கத்தின் முக்கிய நபர்கள் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின.

தாலிபான் முக்கியத் தலைவர் முல்லா முகமது ஒமர் இறந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் இயக்கம் தலைத் தூக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது. சிரியா மற்றும் இராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைக்க நினைக்கும் ஐ.எஸ். பல சர்வதேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x