அமெரிக்க இந்தியர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க இந்தியர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு செனட் ஒப்புதல்
Updated on
1 min read

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் ஷா, இல்லினாயிஸ் மாகாண நீதிபதியாக நியமிக்கப் பட்டதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் தெற்காசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக பெடரல் நீதிபதியாக அனுமதி கிடைத் துள்ளது. செனட்டில் 90-0 என்ற கணக்கில் அவருக்கு முழு ஆதரவுடன் அனுமதி கிடைத்தது.

40-வயதாகும் மணீஷ் ஷா, நியூயார்க்கில் பிறந்தவர். குற்றப்பிரிவு விசாரணை அமைப்பின் தலைவராக உள்ளார். பொருளாதாரக் குற்றப்பிரிவு, பொது குற்றப் பிரிவு ஆகியவற்றில் பணி யாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.

அமெரிக்க நீதித் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். சிறந்த குற்ற விசாரணை நடத்தியதற்காக எப்பிஐ இயக்குநரின் விரு தையும் அவர் பெற்றுள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் முடித்த அவர், சிகாகோ பல் கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இல்லினாயிஸ் நீதிபதியிடம் எழுத்தராகவும் தொடக்ககாலத்தில் அவர் பணியாற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in