

பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதிகளில் பின்ஃபோன் புயல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறும்போது, “பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பின்ஃபோன் புயல் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்கியது. இதில் 16 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
பின்ஃபோன் புயல் காரணமாக காற்று மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதில் மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
பின்ஃபோன் புயல் பிலிப்பைன்ஸில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், சேத விவரம் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை என்றும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கிய 21-வது புயல் பின்ஃபோன் ஆகும்.
பிலிப்பைன்ஸை இம்மாதத் தொடக்கத்தில் கம்முரி புயல், தென் பகுதிகளில் தாக்கியது. இதன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கம்முரி புயல் காரணமாக இதுவரை 10 பேர் வரை பலியாகினர்.