Last Updated : 25 Aug, 2015 05:18 PM

 

Published : 25 Aug 2015 05:18 PM
Last Updated : 25 Aug 2015 05:18 PM

பிரிவினைவாதிகள் 3-வது நபர் அல்ல: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் விளக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மூன்றாவது நபர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விளக்கமளித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற இருந்த இந்தியா பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு செயலாளர்கள் நிலையிலான பேச்சு கடைசி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் பேச்சு நடத்த டெல்லி வந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்துப் பேச திட்டமிட்டனர். இதனால் இந்தியா அதிருப்தி அடைந்தது. மேலும் டெல்லி வந்த பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில் இஸ்லாமாபாதில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக கூறியது: காஷ்மீர் விவகாரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் மூன்றாவது நபர்கள் அல்ல. இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமானவர்கள்.

அவர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ளாமலும், அவர் களுடன் ஆலோசனை நடத்தாமலும் காஷ்மீர் விவகாரத்தில எந்த முடிவும் எடுக்க முடியாது. காஷ்மீர் விவகாரம் இடம் பெறாமல் இந்தியா வுடன் பேச்சு நடத்தினால் அது முழுமையான பேச்சுவார்த்தையாக இருக்காது என்றார். பாகிஸ்தான் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரம் குறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது.

தடை செய்யாத பாகிஸ்தான்

இதனிடையே மும்பை தாக்கு தல் சம்பவத்தில் முக்கிய குற்ற வாளியான ஹபீஸ் சயீத் தலைமை யிலான ஜமாத் உத் தவா அமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தானை மைய மாகக் கொண்டு செயல்படும் ஹக்கானி அமைப்பு ஆகியவை பாகிஸ்தானில் தடை செய்யப்பட வில்லை என்பது தெரியவந் துள்ளது.

பாகிஸ்தானில் தடை செய்யப் பட்ட 60 அமைப்புகள் என்ற அதிகா ரப்பூர்வ பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இருப் பினும், ஜமாத் உத் தவா அதிகாரி களால் கவனமாக கண்காணிக்கப் படும் அமைப்புகள் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் தீவிரவாத அமைப்பு என ஜமாத் உத் தவா அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் ஹபீஸ் சயீத் தலைக்கு ஒரு கோடி டாலர் (சுமார் ரூ.66 கோடி) பரிசுத் தொகை அமெரிக்காவால் அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால், ஹபீஸ் பாகிஸ் தானில் சுதந்திரமாக உலவி வருகிறார்.

ஹக்கானி அமைப்பு, இந்தியா வுக்கு ஆதரவான ஆப்கானிஸ்தான் பகுதிகள் மீதும், மேற்கத்திய நாடுகளிலும் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. காபூலில் 2008-ம் ஆண்டு இந்திய செயல்பாடுகளின் மீதும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி யது. இந்த அமைப்பும், பாகிஸ் தானில் தடை செய்யப்படவில்லை.

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் காய்தா, தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளன. ஐஎஸ் அமைப்பும் தடை செய்யப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x