ஆப்கன் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி 

ஆப்கன் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி 
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் பொதுத் தேர்தலில் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆப்கனில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தலிபான்களின் அச்சுறுத்தலை மீறி 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் போராட்டங்கள் காரணமாகவும், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவும் தேர்தல் முடிவுகள் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலையில் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 50.64% வாக்குகள் பெற்று குறுகிய பெரும்பான்மையில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆப்கன் அதிபராக இரண்டாவது முறையாக அஷ்ரப் கானி பதவி ஏற்க உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லாவுக்கு 39.52% ஓட்டுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகளை அப்துல்லா நிராகரித்தார்.

தேர்தல் முடிவு குறித்து அப்துல்லா கூறும்போது, “ நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்த எண்ணுகிறோம் .எங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நாங்கள் இந்த மோசடி முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார்.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்ககான முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் புதிய அரசின் மூலம் இதற்குத் தீர்வு எட்டப்படும் என்று ஆப்கன் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in