போர்க்குற்றங்கள் மீதான இலங்கையின் விசாரணையை ஆதரிக்கும் அமெரிக்கா

போர்க்குற்றங்கள் மீதான இலங்கையின் விசாரணையை ஆதரிக்கும் அமெரிக்கா
Updated on
1 min read

போர்க்குற்றங்கள் மீதான இலங்கை அரசின் விசாரணைக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணை நடத்துவதன் மீதான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணை செயலர் நிஷா பிஸ்வால் இதனை கொழும்புவில் இன்று அறிவித்தார்.

மைத்ரிபால சிறிசேனா அரசு வாக்குறுதி அளித்ததையடுத்து போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே மேற்கொள்ளும் விசாரணையை ஆதரிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது அமெரிக்க-இலங்கை உறவுகள் சற்றே பாதிப்படைந்தன. இருதரப்பினரும் போர்க்குற்றங்கள் குறித்து கடுமையான விமர்சனக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த ராஜபக்ச தொடர்ந்து மறுத்து வந்ததாலும், சீனாவுடன் இலங்கையின் நெருக்கமும் அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகளை பாதித்தன.

ஆனால் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்ற பிறகு சீன ஆதரவுக் கொள்கையை சற்றே பின் தள்ள தற்போது அமெரிக்காவுடனான உறவுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளதாக இலங்கை தரப்புச் செய்திகள் கூறுகின்றன. இதனையடுத்து போர்க்குற்றங்கள் மீதான உள்நாட்டு விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in