சவுதியில் சுவர் சரிந்து விபத்து: 2 பேர் பலி; 13 பேர் காயம்

சவுதியில் சுவர் சரிந்து விபத்து: 2 பேர் பலி; 13 பேர் காயம்
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வாகனங்களை நிறுத்திவைக்கும் தளத்தின் சுவர் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ளது அல்மரிஃபா பல்கலைக்கழகம். இங்கு வாகனங்களை நிறுத்தும் தளத்தின் சுவர் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் ஒருவர் சவுதியைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் வெளிநாட்டவர் என்றும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்து தொடர்பான புகைப்படங்களையும் சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in