இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்: ட்ரம்ப்புக்கு குர்து தளபதி வேண்டுகோள்

இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்: ட்ரம்ப்புக்கு குர்து தளபதி வேண்டுகோள்
Updated on
1 min read

சிரியாவில் குர்து பகுதியில் துருக்கி படையினர் மேற்கொண்டுள்ள இன அழிப்பைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு குர்து படை தளபதி மஸ்லூம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், “அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி துருக்கி செயல்பட வலியுறுத்த வேண்டும். சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள குர்துகளை வெளியேற்ற துருக்கி செய்யும் பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்கு நடைபெறும் இன அழிப்பைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in