

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வரவிருக்கிறார் போர்ச்சுகல் பிரதமர் அண்டோனிடோ கோஸ்டா.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு டிசம்பர் 19 -20 ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.
இப்பயணத்தில் மகாத்மா காந்தி யின் 150 வது பிறந்த நாள் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் போர்ச்சுக்கல் பிரதமர் கலந்து கொள்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “இந்தியா மற்றும் போர்ச்சுகல் இருநாட்டு பிரதமர்களிடையே நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு இரு நாட்டுக்கு பரஸ்பர ஆர்வம் உள்ள துறைகளில் ஒத்துழைப்பை வழங்குவதற்கு வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பு அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் புதிய உத்வேகத்தை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் பிரதமராக கோஸ்டா கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தேந்தெடுந்தெடுக்கப்பட்டார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டத்திலிருந்து ஐரோப்பாவுக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.