

பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையுடன் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் பெரும்பான்மையுடன் திரும்பியதற்கு வாழ்த்துகள். இந்தியா - பிரிட்டன் தொடர்பாக உங்களுடன் இணைந்து இயங்க ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.