நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 71 ராணுவ வீரர்கள் பலி

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 71 ராணுவ வீரர்கள் பலி
Updated on
1 min read

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 71 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “ நைஜீரியாவில் இன்னேட்ஸ் கிராமத்தில் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் 71 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

நைஜீரியாவின் போகோ ஹராம் ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டில் தங்கள் தாக்குதலை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளனர். போகோ ஹராம் தீவிரவாதிகள் ஏற்படுத்தும் தீவிரவாதத் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சுமார் 20,000 பேர் பலியாகினர், சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in