கிறிஸ்துமஸ் போனசாக ஊழியர்களுக்கு 10 மில். டாலர்கள் தொகையை செலவிட்ட அமெரிக்க நிறுவனம்: மகிழ்ச்சிக் கடலில் ஊழியர்கள்

மகிழ்ச்சிக்கடலில் ரியல் எஸ்டேட் அமெரிக்க நிறுவன ஊழியர்கள். | ஏ.பி.
மகிழ்ச்சிக்கடலில் ரியல் எஸ்டேட் அமெரிக்க நிறுவன ஊழியர்கள். | ஏ.பி.
Updated on
1 min read

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில். டாலர்களை கிறிஸ்துமஸ் போனஸாகக் கொடுத்துள்ளது ஊழியர்களை சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சராசரியாக ஊழியருக்கு 50,000 டாலர்கள் (ரூ.35 லட்சம்) போனஸ், அனைத்து ஊழியர்களுக்குமான மொத்த போனஸ் தொகை சுமார் 10 மில்லியன் டாலர்களாகும்.

செயிண்ட் ஜான் ப்ராப்பர்டீஸ் என்ற அந்த நிறுவனத்தின் தலைவர் லாரன்ஸ் மேக்கிராண்ட்ஸ் சி.என்.என் தொலைக்காட்சிக்குத் தெரிவிக்கும் போது ‘நிறுவனம் தனது பெரிய இலக்கான 20 மில்லியன் சதுர அடி இடத்தில் கட்டிட வளர்ச்சி சாதனையை நிகழ்த்தியுள்ளது’ என்றார்.

இலக்குகளை எட்டியதற்காக கிறிஸ்துமஸ் டின்னருடன் அதே தினத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுக்கப்பட்ட சிகப்பு என்வெலப்பில் இவ்வளவு தொகை இருக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கவில்லை, என்று தி சன் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது பணி அனுபவம் அடிப்படையில் போனஸ் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டு இன்னும் பணியையே தொடங்காத ஊழியர் ஒருவருக்கு 100 டாலர்கள் போனஸ் தொகை உட்பட அதிகபட்ச தொகையாக 270,000 டாலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் வீடியோவில் ஊழியர்கள் மகிழ்ச்சியில் குதியாட்டம் போட்டது பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் லாரன்ஸ் மேக்கிராண்ட்ஸ் கூறும்போது, “ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு எனது நன்றி. இதைவிட அதனை பெரிதாக என்னால் தெரிவிக்க முடியாது. படகை திருப்புபவனாக நான் இருக்கலாம் ஆனால் அவர்கள் தான் படகோட்டிகள். இந்த ஊழியர்கள் இல்லாமல் நாங்கள் நத்திங்" என்றார்.

ரியல் எஸ்டேட் நிறுவனமான இதன் மொத்த மதிப்பு 3.5 பில். டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in