உலகின் இளம் வயது பிரதமரானார் பின்லாந்தின் சனா மரின்

உலகின் இளம் வயது பிரதமரானார் பின்லாந்தின் சனா மரின்
Updated on
1 min read

பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

பின்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தது. இதில் பிரதமராக அண்டி ரின்னே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பின்லாந்தில் நடந்த தபால் துறை பணியாளர்கள் வேலை நிறுத்ததை சரியாக கையாளததால் அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனைத் தொடர்ந்து அண்டி ரின்னே கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

ஜன நாயகக் கட்சி சார்ப்பில் நடந்த பிரதமர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் போக்குவரத்து அமைச்சரான சனா மரின் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், இதனைத் தொடர்ந்து 34 வயதான சனா மரின் பின்லாந்தின் பிரதமராக தேந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து சனா மரின் கூறும்போது, “ மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நிறைய வேலைகள் உள்ளது. நான் எனது வயதையும் பாலினத்தை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. நான் அரசியலில் இறங்கிய காரணத்தையும், வாக்காளர்களின் நம்பிக்கையை வென்றதையும் பற்றியே நினைக்கிறேன்” என்றார்.

முன்னதாக உலகின் இளம் பிரதமாராக நியூசிலாந்தின் ஜெசிந்தாவும், உக்ரைனின் ஒலெக்ஸி ஹான்சரும் அறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in