சிலியில் 38 பேருடன் மாயமான ராணுவ விமானம்

சிலியில் 38 பேருடன் மாயமான ராணுவ விமானம்
Updated on
1 min read

சிலியிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மயமானதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிலி விமான படை தரப்பில் வெளியான அறிக்கையில், " “சி - 130 ஹெர்குலஸ் ராணுவ விமானம் சிலியின் புண்டா அரேனாஸ்லிருந்து பிற்பகல் 4. 45 மணியளவில் புறப்பட்டு அண்டார்டிகாவுக்கு செல்லும் வழிதடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான ராணுவ விமானத்தில் 38 பேர் இருந்தனர். இதில் 21 பேர் பயணிகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிலி அதிபர் செபாஸ்டின் பினரே கூறும்போது, “ விமானம் மாயமாகி இருப்பது மிகுந்த கவலையை அளித்துள்ளது. தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடந்து வருவதாக சிலி விமான படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in