நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி? - தொடரும் மீட்புப் பணி

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி? - தொடரும் மீட்புப் பணி
Updated on
1 min read

நியூசிலாந்து ஒயிட் தீவில் எரிமலை வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு சம்பவம் காரணமாக வெள்ளை தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மாயமானவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “வடக்கு ஐஸ்லாந்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒயிட் ஐஸ்லாந்து தீவில் உள்ள எரிமலை ஒன்று திங்கட்கிழமை வெடிக்கத் தொடங்கியது. இந்த எரிமலை வெடிப்பில் அங்கு சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் இந்த எரிமலை வெடிப்பில் 5 பேர் பலியான நிலையில் 13 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் ஒயிட் தீவு, எரிமலை வெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை உயிருடன் மீட்கப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மாயமானவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஒயிட் தீவில் உள்ள எரிமலை வெடிக்கலாம் என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in